என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாலிபர் மரணம்"
கேரள மாநிலம் காசர் கோடு அருகே உள்ள விதுராவை அடுத்த தேப்பாறையில் வனப்பகுதி உள்ளது.
இங்குள்ள வனப்பகுதியில் ஆதிவாசிகள் குடியிருப்பு உள்ளது. ஏராளமான ஆதிவாசிகளும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். தற்போது இந்த பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதிக்கு செல்லும் ஆதிவாசிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்திருந்தனர்.
தேப்பாறையை சேர்ந்த ஆதிவாசி வாலிபரான அனூஷ் (வயது 26) என்பவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள ஆற்றுக்கு மீன்பிடிக்கச் சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் கிராமத்திற்கு திரும்பவில்லை.
இதனால் கவலை அடைந்த அவரது மனைவி சூர்யா அதுபற்றி உறவினர்களிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் சிலர் அனூசை தேடி வனப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு உள்ள புதருக்குள் அனூஷ் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
அவரை யானை மிதித்து கொன்றிருந்தது. இதுபற்றி வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு சென்று யானையின் காலடி தடங்களை பார்வையிட்டு அதை உறுதிசெய்தனர். இதன் பிறகு அனூசின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி விதுரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆதிவாசி அனூஷ் பலியான இடத்திற்கு அருகே அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அங்கு அதிக அளவில் யானைகள் நடமாட்டம் இருப்பதாகவும் அந்த யானைகள் தாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதி வழியாக அடிக்கடி கடந்து செல்வதாகவும் ஆதிவாசிகள் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். எனவே யானைக் கூட்டத்தை அங்கிருந்து விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகூரை அடுத்த சன்னாமங்களம் காரைமேடு தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் கவியரசன் (வயது 17) இவர் நேற்று இரவு நாகூரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது நாகூர் தேரடி மெயின் ரோட்டில் லோடு வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த நாகூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் உடலை நாகை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதை வழக்கு பதிவு செய்து போலீசார் டிரைவரை தேடி வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த தாங்கல், பெரும்புலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இங்கு மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த போராஸ் தாரா (வயது 26) என்பவர் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இரவு இறால் பண்ணையில் போரஸ் தாரா தூங்கினார். காலையில் மற்ற தொழிலாளர்கள் வந்து பார்த்த போது அவர் படுக்கையிலேயே இறந்து கிடந்தார். இதுபற்றி காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போரஸ்தாரா எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவரை யாரேனும் கொலை செய்தனரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள குளத்தூர் லெட்சுமண புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 34). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சித்ரா. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீர் பாட்டிலால் மனைவியின் கழுத்தை அறுத்தார்.
இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சித்ரா வேறு ஒருவருடன் ஓடி விட்டார்.
சிறையில் இருந்த செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் நகர் வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். இன்று காலை லெட்சுமணபுரம் அருகே தனது தாய் வீட்டு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் எவ்வாறு இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் அங்கு காவலாளியாக வேலை பார்த்து வந்தவர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் மிரட்டி கற்பழித்தனர்.
இது தொடர்பாக அயனாவரம் எஸ்.வி.எம். நகரைச் சேர்ந்த பாபு (வயது30) உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிகை கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் தாக்கல் செய்தனர். கைதானவர்களுக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
கைதான பாபுவுக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. இதற்காக அவரை கடந்த மாதம் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாபு பரிதாபமாக இறந்தார்.
இறந்து போன பாபு இந்த வழக்கில் 10-வது குற்றவாளி ஆவார். அவர் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தவர்.
இதுபற்றி புழல் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
கும்பகோணம்:
சென்னை அம்பத்தூர் சிட்கோ நகரை சேர்ந்தவர் திருவேங்கடம்(வயது41) என்பவர் கடந்த 22-ந்தேதி காலை கும்பகோணம் பஸ் நிலையம் அருகே ஜான் செல்வராஜ் நகரில் உள்ள தனியார் லாட்ஜில் வந்து தங்கி உள்ளார்.
அன்று மதியம் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் அறைக்கு வந்தார். பின்னர் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லையாம்.
நேற்று 24-ந்தேதி இரவு வரை அறையை விட்டு வெளியில் வராததால் கதவை தட்டியும் திறக்காததால் லாட்ஜ் உரிமையாளர் இதுபற்றி கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதன்பேரில் போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது துண்டு மட்டும் அணிந்த நிலையில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அருகில் மூச்சுத் திணறலுக்கு பயன்படுத்தும் மருந்து ஸ்பிரே கிடந்தது. அவரை உடைமைகளை பரிசோதித்ததில் அவர் சென்னையில் இருந்துதான் வந்து தங்கி இருந்தது தெரியவந்ததையடுத்து அவரது வீட்டுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் உடலை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து அவர் மூச்சுத் திணறலில் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சீலியாம்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் செல்லக்கண்ணு. இவருக்கு செல்வராஜ் (28) என்ற மகனும், வனிதா, ராஜேஸ்வரி ஆகிய மகள்களும் உள்ளனர்.
செல்வராஜ் ரிக் வண்டி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 5 மாத கைக்குழந்தை உள்ளது.
செல்வராஜியின் தங்கை வனிதாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு தங்கை ராஜேஸ்வரிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் செல்வராஜ் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி மல்லியகரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது செல்வராஜ் உடல் அருகே ஈர துணி ஒன்று கயிறாக திரிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
இந்த ஈரதுணியால் அவரது கழுத்தை இறுக்கி யாராவது கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார், அந்த ஈரதுணியை கைப்பற்றி, கைரேகை குறித்து கண்டுபிடிக்க தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்
இதையடுத்து செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-
கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஊரில் உள்ள கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை பார்ப்பதற்காக தீபா வந்திருந்தார்.
அப்போது செல்வராஜூம் அந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது தீபாவை பார்த்தவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. தீபாவின் அழகில் மயங்கிய அவர், திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார். தான் உன்னை காதலிப்பதாகவும், என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா? என செல்வராஜ் கேட்டார். அதற்கு தீபா சம்மதித்தார்.
தேர் திருவிழாவின் போது சந்தித்த இருவரும் தொடர்ந்து இரண்டு நாட்கள் காதலித்தனர். பின்னர் 2 நாட்கள் கழித்து இருவரும் பெற்றோர் முன்னிலையில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தீபா பிரசவத்திற்காக கீரிப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது.
இதையடுத்து செல்வராஜ் நேற்று காலை கீரிப்பட்டிக்கு சென்று தனது தங்கை ராஜேஸ்வரிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற உள்ளது. ஆகவே திருமணத்தை முன்னின்று நாம் நடத்த வேண்டும். எனவே குழந்தையுடன் வருமாறு கூறி தீபாவை அழைத்து வந்தார்.
வீட்டிற்கு வந்ததும் செல்வராஜின் பெற்றோர் மகனின் 5 மாத குழந்தையை பார்க்க வேண்டி ஆசையுடன் எடுத்தனர். அப்போது கணவரிடம் தீபா நான் உங்கள் அப்பா, அம்மாவுடன் வீட்டில் வசிக்க மாட்டேன். தனியாக குடும்பம் நடத்துவோம் என்று கூறினார். குழந்தையையும் அவர்கள் எடுக்கக் கூடாது என தெரிவித்தார்.
மனைவி தகராறு செய்ததை தொடர்ந்து செல்வராஜ், தனி குடித்தனம் நடத்துவதற்காக அதே ஊரில் வாடகைக்கு வீடு ஒன்று எடுத்து நேற்று பால் காய்ச்சி அந்த வீட்டில் குடியேறினார்.
இந்த நிலையில் இரவு அவர்களுக்கு வீட்டில் தகராறு ஏற்பட்டது. நள்ளிரவில் தீபா வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இன்று காலையில் கதவு திறந்து கிடந்ததை பார்த்ததும் உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு செல்வராஜ் பிணமாக கிடந்தார் என்பது தெரியவந்தது.
இன்று காலை சகோதரிக்கு நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. அண்ணன் இறந்ததால் நலுங்கு வைக்கும் நிகழ்ச்சி சோகமாக மாறியது.
போலீசார், தலைமறைவான தீபாவை தேடி வருகிறார்கள். #tamilnews
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை அன்னை தெரசா நகரை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 63). இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முரளிதரன் தனது மோட்டார் சைக்கிளில் உப்பளம் ரோடு வழியாக சோனாம் பாளையம் சென்ற போது, திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் முரளிதரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முரளிதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிழக்கு பகுதி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி, ஏட்டு நாகராஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் சங்கீதா (பெயர் மாற்றம்). இவர் தனது உறவினரான அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் (பெயர் மாற்றம்) என்பவரை காதலித்து வந்தார்.
இந்த நிலையில் சங்கீதாவின் குடும்பத்தினர் அவரை வேறொருவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் சங்கீதா காதலனை மறக்க முடியாமல் தவித்துள்ளார்.
நேற்று இருவரும் வயல் வெளியில் எலி மருந்து குடித்தனர். மயங்கிய நிலையில் இருந்த இருவரையும் கண்ட கிராமத்தினர் அவர்களை மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியில் சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். சங்கீதா மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 20). மாற்றுத்திறனாளியான இவர் பிராட்வேயில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார்.
அந்த கடையின் மேல் தளத்தில் உள்ள வீட்டில் கடந்த 19-ந்தேதி 20 பவுன் நகைகள் திருட்டு போனது. இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமார், அவரது நண்பர்கள் விக்னேஷ், அஜித்குமார் ஆகியோரை கடந்த 20-ந்தேதி அதிகாலை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் போலீஸ் காவலில் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக மனித உரிமை ஆணைய போலீசார் விசாரணை நடத்தி 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார். #EsplanadePoliceStation
சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயக்குமார் (20). பிராட்வேயில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடையில் அவருடன் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய வாலிபர்களும் வேலை செய்து வருகிறார்கள். கடையின் மேல்பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நகை திருட்டு போய் உள்ளது.
இந்நிலையில், எஸ்பிளனேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாலிபர் ஜெயக்குமார் இறந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்காக மாஜிஸ்திரேட்டு ஆனந்தன் நியமிக்கப்பட்டார். அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார். உயிரிழந்த வாலிபரின் பெற்றோரிடமும், எஸ்பிளனேடு போலீசாரிடமும் விசாரணை நடத்தினார். #EsplanadePoliceStation
சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயக்குமார் (20). பிராட்வேயில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடையில் அவருடன் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய வாலிபர்களும் வேலை செய்து வருகிறார்கள். கடையின் மேல்பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நகை திருட்டு போய் உள்ளது.
ஆனால், அவரை போலீசார் லாக்கப்பில் வைத்து அடித்து கொன்றுவிட்டதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்ற இருவரையும் விடுவிக்க வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், எஸ்பிளனேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார். #EsplanadePoliceStation
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்